Homeபிற செய்திகள்கோவையில் அக்.4ல் அவேரா இதய மருத்துவமனை திறப்பு

கோவையில் அக்.4ல் அவேரா இதய மருத்துவமனை திறப்பு

கோவையில் 100 படுக்கைகள் கொண்ட புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4ல் திறக்கப்படுகிறது. இவ்விழாவில் பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி. பாலசுப் பிரமணியம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இதய சிகிச்சைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையில் 2 கேத் லேப்கள், 2 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட இதய சிகிச்சைப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இதய-மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 24 மணி நேர மருந்தகம், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளும் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனையை டாக்டர் ராஜ்பால் கே. அபாய்சந்த் மற்றும் இதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர், பத்மநாபன் ஆகியோர் இணைந்து தொடங்குகின்றனர். கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மேம்பட்ட இதய சிகிச்சையை எளிதில் வழங்குவதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img