Homeபிற செய்திகள்சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 29 வது பட்டமளிப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உரையாற்றினர்.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மூன்றா ண்டு மற்றும் ஐந்தாண்டு இளங்கலை சட்டப்படிப்பு முடித்த பட்ட தாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 380 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனைவர் பெ.முருகன் மற்றும் ச.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ்.எஸ்.பி. தார்வேஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி என்.பார திராஜன், குற்றவியல் நீதிபதி ஆர்.அப்துல் சலாம். உரிமையியல் சார்பு நீதிபதி ஆர்.மனோகரன், குற்றவியல் நீதிபதி முத்துகிருஷ்ணன், முரளிதாஸ், குற்றவியல் நீதிபதி எஸ்.பூவராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் தலைமையுரை ஆற்றிய சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் தலைவர் சரவணன் தனபாலன் கூறுகையில், இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக வேண்டும் என்ற நிறுவனர் பேரா.இரா.வை தனபாலன் அவர்களின் கனவு இன்று நனவாகியுள்ளது. குறிப்பாக இன்று வருகை தந்து சிறப்பித்துள்ள இந்த இரண்டு நீதியரசர்களையும் உள்ளடக்கி, இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 7 பேர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களாகியுள்ளதை குறிப்பிட்டு அவர்களுள் 2 நீதியரசர்கள் இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
நிறுவனரின் கனவு மெய்பட்டதை போல.. தனக்கும் ஒரு கனவு உள்ளது..! இக்கல்லூரியின் மாணவர்கள் இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் களாக வேண்டும் என்பதே தனது கனவு. அந்த கனவு நிச்சயமாக இங்கு கூடியுள்ள பட்டதாரிகளால் மெய்ப்படும் என்றும் அவர் தனது நம்பிக்கையை தெரிவித்தார்.

தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனைவர் பெ.முருகன் மற்றும் ச.கார்த்திகேயன் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இக்கல்லூரியின் மாணவராக இருந்தபோது ஒழுக்கத்துடன் கூடிய சட்டக்கல்வி போதிக் கப்பட்டதை நினைவு கூர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img