Homeபிற செய்திகள்ரூ.60 லட்சம் மதிப்பு கொலு பொம்மைகளுடன் ஈரோடு பூம்புகாரில் கண்காட்சி தொடக்கம்

ரூ.60 லட்சம் மதிப்பு கொலு பொம்மைகளுடன் ஈரோடு பூம்புகாரில் கண்காட்சி தொடக்கம்

ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் “கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை”-யை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளர் மாலதி முன்னிலையில் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோன்று டெக்ஸ்வேலி குளோபல் மார்க்கெட்டில் அமைந்துள்ள பூம்புகார் கிளை விற்பனை நிலையத்திலும் இக்கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கண்காட்சிக்காக மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மண்டலத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பொம்மைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 லட்சம் அளவுக்கு பொம்மைகள் விற்பனையாகியிருந்தது.
கூலி உயர்வு மற்றும் காகிதக்கூழ், களிமண் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொலு பொம்மைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பொம்மைகள் காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் ரூ.60 முதல் ரூ.20,000 வரையிலான பல்வேறு வகையான கொலு பொம்மைகள் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img