Homeபிற செய்திகள்வேளாளர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்க விழா

வேளாளர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்க விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் உள்ள VCET IT பூங்காவில், VCET IIF தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்களால் உருவாக்கப்பட்ட புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களைப் பார்வையிட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விழாவில் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் ச.பாலசுப்பிரமணியன், மு.யுவராஜா, கல்லூரி முதல்வர் எம். ஜெயராமன், புலமுதல்வர், நிர்வாக மேலாளர், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிறுவனப் புத்தாக்கக் குழு , தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img