கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய் ருசி உணவகம், கர்நாடக பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை வழங்கி 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனர் அசோக் பாட்டிஜா, நுகர்வோர் மின்னணு துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். பெங்களூரு உணவு வகைகள் மீதான ஆர்வத்தால் இவ்வுணவகத்தை தொடங்கினார். அவரது மனைவி காஞ்சன் பாட்டிஜாவும் சமையலறை தரநிலைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
ரவா இட்லி, தாவணகெரே பெண்ணே தோசை, மைசூர் மசாலா தோசை, நீர் தோசை, பனீர் சப்ஜியுடன் புல்கா உள்ளிட்டவை பிரபலமானவை. மேலும், ரவா இட்லி மிக்ஸ் தயாரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தயாரிப்பு அமெரிக்காவிலும் விற்பனை செய்யப் படுகிறது.



