Homeபிற செய்திகள்திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில்சுய உதவிக் குழுக்களின் கல்லூரி சந்தை

திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில்சுய உதவிக் குழுக்களின் கல்லூரி சந்தை

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் நடைபெறும் இந்த ‘கல்லூரி சந்தை’ இன்று (25-ஆம் தேதி) மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கைவினைப் பொருள்கள், கைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள், பைகள், மரச்செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், தேன், தின்பண்டங் கள், மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட் டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், வணிக மேலாண்மை மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியைப் பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆதரவளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img