கடந்த அதிமுக ஆட்சியில், சூலூர் கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா தயாரிப்பு ஆலையை எதிர்த்து, நியாயமான விசாரணை நடத்தக் கோரி கண்டனம் தெரிவித்த திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மீதான வழக்கு கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் ஆஜராக வந்த அவருடன், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமைசெயற்குழு உறுப்பினர் சுரேஷ், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் பி.எஸ்.செல்வராஜ், பள்ளபாளையம் நகரச் செயலாளர் கபிலன், பாப்பம்பட்டி பரமசிவம், தெற்கு மாவட்டப் பிரதிநிதி மாதப்பூர் தங்கராஜ், செல்வராஜ், கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் கே.எம். தண்டபாணி, வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் முத்து விஜயன், வழக்கறிஞர் என்.ஆர்.விக்ரம், வழக்கறிஞர் எம்.மதிவாணன், வழக்கறிஞர் ஸ்ரீ ஹரி ஜெகதீசன், வழக்கறிஞர் முருகானந்தம், வழக்கறிஞர் ராஜமாணிக்கம், வழக்கறிஞர் ஜேசுதாஸ், ஜெ.தீபக் மது, வி.லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.



