பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இரண்டாவது நாளாக பொள்ளாச்சி வட்டாரத் தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் நேற்று ஆய்வு செய்தார்.

வெள்ளாளபாளையம் ஊராட்சியில் தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, குடிநீர் விநியோக அளவு, முறைகள் குறித்து ஆய்வு செய்தார். வன நாற்றாங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் புங்கன், சப்போட்டா, தான்றி, முருங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சியையும் பார்வையிட்டார். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் செயல்படும் நெகிழிக் கழிவு அரைக்கும் இயந்திரத்தையும் ஆய்வு செய்தார்.

வெள்ளா
ளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப் படை வசதிகள், பதிவேடுகள், சமையலறை மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.



