பேங்க் ஆஃப் இந்தியா, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற மற்றும் புறநகர் கிளைகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பழனியில் நடந்த கூட்டத்தில் எடுத்த படம். 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த கூட்டங்களில், இணையவழி மற்றும் நேரடி மோசடிகள் நடக்கும் விதங்கள், பணமோசடி தடுப்பு நடைமுறைகள் (AML), ‘மியூல்’ கணக்குகள் (Mule accounts) மற்றும் அவற்றால் ஏற்படும் நிதி மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



