கோவை மத்துவராயபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று (20ம் தேதி) அறுவடை திருநாள் பண்டிகை நடைபெற்றது. இதனை பேராசிரியர் டாக்டர் நிர்மல் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். நிகழ்வில் ஆயர்கள் ராபின்சன் பிரபாகரன், கருணாகரன், ஜெபதுரை, பொருளாளர் ஆனந்த ஆசீர், திருமண்டல உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானப்பிரகாசம் மற்றும் சபை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.



