Homeபிற செய்திகள்பெண்களுக்கான 7ம் கட்ட தையல் பயிற்சி நிறைவு விழா

பெண்களுக்கான 7ம் கட்ட தையல் பயிற்சி நிறைவு விழா

பசுமை உலகம் தன்னார்வ அமைப்பு சார்பில் பெண்களுக்கான 7-ஆம் கட்ட தையல் பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கும் விளிம்புநிலை பெண்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை பசுமை உலகம் தன்னார்வ அமைப்பு செயல்படுத்தி வருகிறது. நிகழ்ச்சிக்கு பசுமை உலகம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ஜி. மன்மோகன் தலைமை வகித்தார். ட்ரீமர்ஸ் அகாதெமியைச் சேர்ந்த தீபா, திரியா டிசைனர் அகாதெமி நிறுவன உரிமையாளர் சுமித்ரா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பசுமை உலகம் கள ஒருங்கிணைப்பாளர்கள் கௌசல்யா, துர்கா ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img