Homeபிற செய்திகள்ஆல்-ஸ்டார்ஸ் வரிசையில் புதிய ஜாவா 42

ஆல்-ஸ்டார்ஸ் வரிசையில் புதிய ஜாவா 42

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ஆல்-ஸ்டார்ஸ் வரிசையை நிறைவு செய்யும் வகையில் புதிய ‘ஜாவா 42’ மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள ஜாவா 42 தியி, 42 பாபர் மாடல்களுடன் புதிய 42 இணைந்துள்ளது.
புதிய ஜாவா 42-ல் 60-க்கும் மேற்பட்ட மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பக்கவாட்டு பேனல்கள், மேல்நோக்கிய எக்ஸாஸ்ட், அலாய் வீல்கள், அகலமான டயர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
294.72 சிசி ஒற்றை சிலிண்டர், திரவக் குளிரூட்டப்பட்ட டிஓஎச்சிசி இன்ஜின், 6 வேக கியர்பாக்ஸ், இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதிகள் உள்ளன.
கிளாசிக் லெஜெண்ட்ஸ் இணை நிறுவனர் அனுபம் தரேஜா கூறுகையில், “ஜாவா 42 இந்தியாவின் நவீன கிளாசிக் பிரிவைத் தொடங்க உதவியது,” என்றார். ஜாவா 42-ன் ஆரம்ப விலை ரூ.1,79,942 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img