Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கிய கோவை கலெக்டர்

விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கிய கோவை கலெக்டர்

கோவை கூடலூர் நகராட்சியில் வேளாண்மை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் விவசாயிக ளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், செல்வபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ.3.60 லட்சம் மானியத்தில் ரூ.7.74 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்பட்டது. மேலும், 3 விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதைகளும், ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் தட்டைப்பயறு விதை, உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, பழங்குடி யின மக்களுக்காக ரூ.2.16 கோடி மதிப்பில் கட் டப்பட்டு வரும் 54 குடியிருப்புகளின் பணி களை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரை வாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img