பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.தயாலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன், லிவிங்ஸ்டன், ராஜபொம்மு, செல்வம், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கணேசமுருகன், விக்னேஷ்ராஜ், சார்பு அணி நிர்வாகிகள் மணிகண்டன், அரசமுத்து, பகுதி செயலாளர்கள் அரசமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



