Homeபிற செய்திகள்ஆனைகட்டியில் வாரச்சந்தையை திறந்துவைத்த கனிமொழி எம்எல்ஏ

ஆனைகட்டியில் வாரச்சந்தையை திறந்துவைத்த கனிமொழி எம்எல்ஏ

ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து வாரச்சந்தை செயல் படு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வாரச்சந்தையை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்போது அவர் பேசும்போது, ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் அரசு உறுதுணையாக இருக்கும்.
மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல் படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img