கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில், ஸ்ரீராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இந்திய சுவாசப் பராமரிப்பு சங்கம் சார்பில் ‘இன்டென்சிகேர் 2026’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.சுந்தர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கங்கா மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவு தலைவர் டாக்டர் வி.எம்.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகவும், இந்திய சுவாசப் பராமரிப்பு சங்க பொதுச்செயலாளர் டாக்டர் சௌம்யா ஜான்சன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர். டாக்டர் ஆர்.பி.ராம்குமார் மையக்கருத்தை வெளியிட்டார்.
டாக்டர் என். மஞ்சுநாதன், டாக்டர் டி. கதிர்செல்வன், டாக்டர் ஜி. கிருஷ்ண சமீரா, டாக்டர் பி. இந்திராதேவி உள்ளிட்டோர்
உரையாற்றினர்.
தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



