Homeபிற செய்திகள்முதுகுத்தண்டு காயம் பாதித்தோருக்கு அதிநவீன தானியங்கி நடைப்பயிற்சி

முதுகுத்தண்டு காயம் பாதித்தோருக்கு அதிநவீன தானியங்கி நடைப்பயிற்சி

உலக முதுகுத்தண்டு காயம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை சோல் ஃபிரீ இன்ஸ்பயர் சென்டரில் ‘மாத்தியோசி 2026’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதுகுத் தண்டு காயம் பாதித்தோருக்கான அதிநவீன தானியங்கி நடைப்பயிற்சி சேவையை மாவட்ட கலெக்டர் வந்த னா கார்க் தொடங்கி வைத் தார். முதுகுத் தண்டு காயம் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். முன்னதாக, மையத்தில் செயல்படுத்தப்படும் அதிநவீன நடைப்பயிற்சி சேவைகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோல் ஃபிரீ சார்பில், புற எலும்புக்கூடு அதிநவீன ரோபோ நடைப்பயிற்சி தொழில்நுட்பத்தின் மூலம் நடைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img