காவல்துறையினருக்கு உற்ற நண்பனாக திகழ்வது சிசிடிவி கேமராக்கள். அத் தகைய சிசிடிவி கேமராக்கள் மாநகர், பகுதிகளில் பல்வேறு இடங்களில் பழுதடைந்த நிலையிலும், உடைந்த நிலையிலும், கிடப்பது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகின்றது.
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கும், மாநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்கள் பல்வேறு காவல்துறையினருக்கு பக்க உறுதுணையாக இருந்து வருகின்றது. குறிப்பாக விபத்துக்கள், மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அடையாளம் காட்டுவதற்கு, இத்தகைய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றது.
ஆனால் தற்போது மாநகர் பகுதிகளில், மட்டுமில்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள பல்வேறு கேமராக்கள் செயல்படாமலும், உடைந்த நிலையில் கிடப்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் களுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடுகின்றது.
எனவே மாநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பு செய்தும், உடைந்த நிலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மாற்றம் செய்து, அல்லது புதிய கேமராக்களை அந்த பகுதியில் மீண்டும் நிறுவி, அங்கு நடைபெறும் சம்பவங்களை, பதிவு செய்தால் மட்டுமே மாநகரில் திருட்டு சம்பவங்களும், குற்றச் சம்பவங்களும் குறையும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் செய்ய முன்வர வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.



