கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், கோவை மண்டல பாலிடெக் னிக் கல்லூரிகளுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 10 அணிகள் பங்கேற்றன.
போட்டியை கல்லூரி முதல்வர் டாக்டர் டி. கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடமும், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடமும் பெற்றன. பெண்கள் பிரிவில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடமும், பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடமும் பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடு களை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எம். சுவாமிநாதன் செய்திருந்தார்.



