ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார் டிம் குக். புதிய சிஇஓ-வாக ஜான் டர்னஸ் இன்று பதவியேற்கிறார்.
அந்நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள டிம் குக், தனது கடைசி பணி நாளில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஆப்பிள் நிறுவன சிஇஓ-வாக இன்றே எனக்கு கடைசி நாள். இந்த தருணம் என்றாவது ஒருநாள் வரும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நாள் இப்போது வந்ததை ஏற்க கடினமாக உள்ளது. இந்த நிறுவனத்தையும், அதன் குழுவையும் நான் நேசிக்கிறேன். உங்களை தலைமை தாங்கியது வாழ்நாளின் சிறப்பாக கருதுகிறேன்.
எனது வெற்றி என்று எதை சொன்னாலும் அதன் பின்னணியில் நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. இந்த பொறுப்பை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவில்லை என்றாலும் நான் நேசித்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். அடுத்த சிஇஓ ஜான் உங்களை திறம்பட வழிநடத்துவார், என டிம் குக் தெரிவித்துள்ளார்.



