Homeபிற செய்திகள்குறைமாத குழந்தைக்கு சிக்கலான இருதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சாதனை

குறைமாத குழந்தைக்கு சிக்கலான இருதய அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சாதனை

33 வாரங்களில் 1.7 கிலோ எடையுடன் பிறந்த குறை மாத பெண் குழந்தைக்கு, கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவ மனையில் சிக்கலான இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பிறவியிலேயே இருதயக் குறைபாடு இருந்த குழந்தைக்கு, சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் 233 நிமிடங்கள் கார்டியோபல்மனரி பைபாஸ் கருவி உதவியும், 130 நிமிடங்கள் இருதயத்தை நிறுத்தி சிகிச்சையும் மேற்கொள்ளப் பட்டது.
தற்போது குழந்தை நல முடன் குணமடைந்து வருகிறது.
குழந்தையின் குடும்பத்தின ரால் சிகிச்சை செலவை ஏற்க முடியாத நிலையில், கே.எம்.சி.ஹெச் நிர்வாகம் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டது என தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, நிர்வாக இயக்கு நர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தனர்.
டாக்டர் கே.எஸ். முர்த்தி தலைமையில், டாக்டர் வினோத் துரைசுவாமி, டாக்டர் வினோத் குமார், டாக்டர் கண்ணன், டாக்டர் ரமேஷ், டாக்டர் கப்பியன், டாக்டர் ரமீஸ், டாக்டர் சீனிவாசன், டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர் அபிராமலதா மற்றும் பெர்ஃபியூ ஷனிஸ்ட் திலகவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இவர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img