கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, காருண்யா நலவசதி சங்கம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதிப் போட்டியில் இவாஞ்சலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு காருண்யா நலவசதி சங்க செயலர் ஜெபக்குமார் செல்வின் பரிசுக்கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர் ஜெபசிங் மற்றும் பேராசிரியர்கள் நிர்மல், காட்சன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



