Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி யின் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில், மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தனியார் மஹாலில் நடந்தது.
இதில் பூத் கமிட்டி முதல் அனைத்து மட்டங்களிலும் கமிட்டிகளை அமைப்பது டன், வார்டு அளவிலும் கமிட்டிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகிகள் கூறினர். இதற்கான விண்ணப்பங்களும் நிர்வாகி களுக்கு வழங்கப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுடலை யாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள், மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img