விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போல்டன்புரத்தில் மாவட்ட துணை செயலா ளர் லிவிங்ஸ்டன் ஏற்பாட்டில் அரிசி பைகள், லட்டுகள் வழங்கப்பட்டன.
அண்ணா நகரில் பகுதிச் செயலாளர் வல்லரசு துரை ஏற்பாட்டில் வேட்டி, சேலை, அரிசி பைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் செயலாளர் நாராயணமூர்த்தி ஏற்பாட்டி லும், முத்தையாபுரம், கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் ஏற்பாட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. புதுப்பட்டி, செட்டி மல்லம்பட்டி பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட அவை தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணை செயலா ளர்கள் மாலதி, நாராயண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.



