Homeபிற செய்திகள்தேசிய தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவை பள்ளி மாணவன் இளநீர் வியாபாரியின்...

தேசிய தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவை பள்ளி மாணவன் இளநீர் வியாபாரியின் மகன் அசத்தல்

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடை பெற்ற 17-வது தேசிய அளவி லான தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி இம்மாதம் 21, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற்றது, இப்போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கோவை 12ம் வகுப்பு மாணவன் எம்.தீபன் ராஜா தங்கப் பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த் துள்ளார். இவரது தந்தை இளநீர் வியாபாரி ஆவார்.

20 மாநிலங்களுக்கு மேல் வீரர்கள் கலந்து கொண்ட சூழ்நிலையில் கடும் சவால்கள் நிறைந்த சீனியர் 70 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் தனது அபாரமான ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் வெளிப் படுத்தி, தமிழ்நாட்டிற்கு முதல் இடத்தையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார் மாணவன் தீபன் ராஜா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மூத்த சகோதரர் திலக வர்ஷன் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த குவான் கீடோ தற்காப்பு கலைப் போட்டியில் தமிழகத்திற்காக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பி டத்தக்கது.
இன்று தீபன் ராஜா வுக்கு அவரது இருப்பிடம் சார்ந்த கோவை ரத்தினபுரி பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி பிரமுகர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு தீபன் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img