தூத்துக்குடி மாவட்டத்தின் பழமையான பள்ளிகளில் ஒன்றான புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் 142வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி அருட்தந்தை மரிய சிங்கராயர் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். தாளாளர் டாக்டர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர் அருட்தந்தை அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவரும், தூத்துக்குடி சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவன உரிமையா ளருமான சிவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் மார்ட்டின் ராஜதுரை நன்றி கூறினார். விழாவில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



