கோவை ஃபைவ் கார்னர் பகுதியில் வசிக்கும் விஜயானந்த், நேற்று மாலை ஜெயின் கோவில் அருகே ரூ. 1.75 லட்சம் ரொக்கம் அடங்கிய பையைக் கண்டெடுத் தார்.
தாமதிக்காமல் உடனடியாக அப்ப ணத்தை வி.எச். ரோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனையடுத்து, பணத் தைத் தவறவிட்ட ஈரோட்டைச் சேர்ந்த நிர்மல் ராவல் புகார் அளிக்க காவல் நிலை யம் வந்த நிலையில், உரிய விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, தெற்கு மண்டல காவல் துணை ஆணையர் முன்னிலை யில் அப்பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட் டது. விஜயானந்தின் இந்த நற்செயலையும் நேர்மையையும் பாராட்டி காவல் துணை ஆணையர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.



