ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ‘ராம்ராஜ் காட்டன்’ 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி ஆசியாவின் மிகப்பெரிய பூக்களத்தை (முண்டுக்களம்) உரு வாக்கி ‘ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாத னைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையின் அடையாளமான அத்தப்பூக் கோலத்தையும், தமிழர்களின் கலாச்சார அடையா ளமான வேட் டியையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மாலில் 30 அடி விட்டத்தில் இந்த பிரம்மாண்ட முண்டுக்களம் வடிவமைக்கப்பட்டது.
இதற்கான சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதினை, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நடுவர் சஞ்சய் போலா, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜனிடம் வழங்கிக் கௌரவித்தார்.
இது குறித்து ராம்ராஜ் காட்டன் தலைவர் நாக ராஜன் தெரிவித்ததாவது:
“எங்களைப் பொறுத் தவரை வேட்டி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல; நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இந்த ஓணம் பண்டிகையில் அந்தத் தொடர்பை மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் 3,000 வேட்டிகளால் இக்களத்தை உருவாக் கினோம். கலாச்சாரத்தை இன்றைய தலைமுறைக்கு புதுமையான வடிவில் கொண்டு சேர்த்ததில் பெருமிதம் கொள்கிறோம்.”
பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து நிகழ்த் தப்பட்டுள்ள இந்தச் சாதனை பொது மக்கள் மற்றும் பார்வை யாளர் களிடையே பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது.



