Homeபிற செய்திகள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: காந்தி கிராம பல்கலை& ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: காந்தி கிராம பல்கலை& ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

திண்டுக்கல் காந்கிராம கிராமியப் பல்கலைக்கழகம், இந்தியா &- ஜப்பான் நாடுகளுக்கு இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் ஜப்பானின் ‘ஹெச்-2 இன்னோவேஷன்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.


பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் தொழில் நுட்பங்களில் ஜப்பான் நிறுவனங்கள், இந்திய தொழிற்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு இடையே கூட் டாண்மையை ஏற்படுத்து வதே இதன் முக்கிய நோக்கமாகும்.


இதன் ஒரு பகுதியாக, ஜப்பானின் ‘ஹெச்-2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மோரி தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் அரசுப் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்து, பசுமை ஆற்றல் துறையில் தொழில்நுட்பப் பங்களிப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.


இது தவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் பற்றிய விளக்கக்காட்சியும், முன்னணி கல்வி நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத் தாகின்றன. ஜப்பா னைச் சேர்ந்த மோரி சுற்றுச்சூழல், ஆற்றல் சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். இவர் ட்ரீம் (ஜூப்24) ஹைட்ரஜன் மின் உற்பத்தி அமைப்பை அறிமுகப் படுத்திய ‘ஹெச்2 இன்னோவேஷன்’ நிறுவனத் தின் நிறுவனராவார்.
இவர்களின் இந்தக் கூட்டு முயற்சியானது, எதிர்கால தூய்மை ஆற்றலாக விளங்கும் பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிப்பது, எதிர்கால போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் ஹைட்ரஜன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத் துவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. மேலும், தண்ணீரை அடிப் படையாகக் கொண்டு ஹைட்ரஜன் தயாரிக்கும் முறைகள் குறித்தும் ஆராயப்படுகிறது.


“நீரே எதிர்காலத் திற்கான எரிபொருள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, நீண்ட கால நோக்கில் கடல்நீரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இவர்களின் இந்த வருகை மற்றும் ஆலோசனைகளை கேகேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கருணாநிதி காசிநாதன் ஒருங்கிணைத்தார்.


கல்வி மற்றும் தொழிற்துறை இடையிலான இந்த முயற்சியின் கீழ், திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது. பல்கலைக் கழக பதிவாளர் (பொ) முனைவர் ஆ.சுந்தரமாரி, ஜப்பானின் ‘ஹெச்2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மற்றும் கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கருணாநிதி காசிநாதன் ஆகியோர் கையொப்பம் இட்டனர்.


இவர்களின் இத்திட்டம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான சிறந்த தளத்தை அமைத்துத் தரும். தூய்மை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படும் இத்தருணத்தில், இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜப்பானின் ‘ஹெச்2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மோரி காந்திகிராம ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே கலந்து ரையாடினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ந.பஞ்சநதம் காணொளி மூலம் தலைமை உரை ஆற்றினார்.


இந்த ஒரு சிறப்பான ஒப்பந்த ஏற்பாடுகளை பல்கலை கழக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் மீனாட்சி சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img