Homeபிற செய்திகள்நந்தா இன்ஜினியரிங் கல்லூரியில்முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

நந்தா இன்ஜினியரிங் கல்லூரியில்முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

ஈரோடு நந்தா இன்ஜினியரிங் கல்லூரியில் முதுகலை துறைகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் இளங்கலை இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை பெற்றவர் களுக்கான வகுப்புகளின் துவக்க விழா நடைபெற்றது.


இவ்விழாவினை ஸ்ரீநந்தா கல்வி அறக் கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை யேற்று துவக்கி வைத்தார். விழாவில் ஈரோடு லயன்ஸ் கிளப்பின் முன்னாள் சர்வதேச இயக்குனர் தனபாலன் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் கோவை ஈ.பி.ஏ.எம் நிறுவனத்தின் இன்ஜினியர் மீனாட்சி சுந்திரம் கவுரவ விருந்தினராகவும் கலந்துக் கொண்டனர்.


பின்னர், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திருமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் ரகுபதி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலயிருக்கும் மாணவர் களையும், அவர்தம் பெற்றோர்களையும் வரவேற்றனர். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் நந்தகுமார், பிரதீப் ஆகியோர் வாழ்த்துக் களைத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img