ஈரோடு விஇடி கல்லூரியில் 3-வது சர்வதேச அளவிலான கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதக் கருத்தரங்கம் (ICCSAM–2026)நடைபெற்றது.
விஇடி கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் துறைகள் மற்றும் மலேசியாவின் ஆசியா பசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் பல்கலைக்கழகத்துடன்(Asia Pacific University of Technology and Innovation) இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. நேரடியாகவும் இணைய வழியாகவும் கருத்தரங்கம் நடைபெற்றது.
கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் சி. ராதிகா வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலர் செ.து.சந்திரசேகர் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி மு.யுவராஜா, கல்லூரி முதல்வர் முனைவர் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையர் முனைவர் சி. லோகேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



