தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சியில், ஈரோடு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் சார்பில் பட்டுச் சேலைகளுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்தக் கண்காட்சி நடை பெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, நெசவாளர்களுக்கு ரூ. 28.95 லட்சம் நிதி உதவியும், 10 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங் கினார். கோஆப்டெக்ஸ் மேலாளர் பிரியா கூறுகையில், சேலம், கோவை போன்ற பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் பட்டுச் சேலைகளுக்கு ஆண்டு முழுவதும் பொதுவாக 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தக் கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்களில் (ஆகஸ்ட் 7 மற்றும் 8) 30 சதவீத தள்ளுபடி வழங்கப் படுகிறது என்றார்.
இங்கு குறைந்தபட்சமாக ரூ. 8,630 முதல் அதிகபட்சமாக ரூ. 45,000 வரை பட்டுச் சேலைகள் விற்பனைக்கு
உள்ளன.
காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் அசல் சில்வர் ஜரிகை மற்றும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கூடிய ஒரிஜினல் பட்டுத் துணியால் ஆனவை ஆகும்.
ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் பி.வெங்கடேசன் தெரிவிக்கையில், ஈரோடு மண்டலத்தில் 191 கைத்தறி மற்றும் 57 விசைத்தறி கூட் டுறவு சங்கங்கள் உள்ளன என்றும், இவற்றில் 55,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இக்கண்காட்சியில் பல கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன.



