Homeபிற செய்திகள்காமநாயக்கன் பட்டி தூய பரலோக மாதா பேராலய 3வது விண்ணேற்பு பெருவிழா

காமநாயக்கன் பட்டி தூய பரலோக மாதா பேராலய 3வது விண்ணேற்பு பெருவிழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன் பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் கடந்த 18.7.2023ல் பேராலயமாக (பசிலிக்கா) உயர்த்தப் பட்டது. பேராலயமான பிறகு 3வது விண்ணேற்பு பெருவிழா நேற்று முன்தினம் (6ம் தேதி) மாலை 6 மணிக்கு குழித் துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியு டன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கொடியேற்ற அருளுரை, மறையுரை மற் றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
இன்று (8ம் தேதி ) காலை 8.30 மணிக்கு மரியன்னை மாநாடு நடைபெற்றது. நாளை (9ம் தேதி) காலை 8.30 மணிக்கு முதல் புதுநன்மை விழா, 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட் டுத் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விண்ணேற்புப் பெருவிழாவான ஆக. 15ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் கும்பிடு சேவை செய்து நேர்ச்சை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் காலை 6 மணி, 8 மணி திருப்பலிகள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு அருட் பணி சகாயதாசன். அந் தோனிசாமி, வியாகப்ப ராஜ், யூதா போஸ்கோ, பெஞ்சமின், ஜான்கென்னடி. கிளாட்வின், சந்தி யாகு. அந்தோனிராஜ், ஞானப்பிரகாசம் ஆகியோர் திருப்பலி நடத் துகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img