Homeபிற செய்திகள்கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலை வருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணாநகரில் இருந்து அலங்கரிக் கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படத் துடன் ஊர்வலம் புறப்பட்டு, நான்காம் கேட், புதிய பேருந்து நிலையம் வழியாக எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கும் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img