வேலூரில் உள்ள பொற்கோவில் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணிபீடம் சார்பாக அருள்திரு. ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சித்தவைத்தியத்தில் சாதனை படைத்து பாரம்பரியமாக சித்தமருத்துவத்தில் ஈடுபட்டு வரும் சித்த வைத்தியர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அறங்காவலரும், நாராயணிபீட மேலாளருமான சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். நாராயணி பீடத்தை சேர்ந்த ஸ்ரீ பாலாஜி, சுரேஷ்பாபு, சித்த மருத்துவர்கள் சுந்தரமீனாள், மணிகண்டன், பத்மபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீநாராயணி பீட சித்த மருத்துவர் வரவேற்று பேசினார். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சித்த மருத்துவர்களுக்கு அருளாசி அருளாசி வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் அரவிந்த்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
அவர் பேசும்போது, இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் விழாவில் கலந்து கொண்டுள்ள 108 சித்த மருத்துவர்கள் நாம் வழிபட்ட சித்தர்கள் வழியில் இன்றுவரை சித்த மருத்துவத்திற்கான மருந்துகளை தயார் செய்து பலரது உயிரை காப்பாற்றி உள்ளனர். அவர்களை வாழ்த்துகிறேன். ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு விட்டுச்சென்ற பாரம்பரிய வைத்திய முறைகளை முறைப்படி செய்து சித்த மருத்துவத்திற்கு பெருமை தேடித்தர வேண்டுமென்றார்.
விழாவில் ஸ்ரீசக்தி அம்மா பேசும்போது, நமது முனிவர்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தவம் இருந்து அரிய பொக்கிஷமான சித்த மருத்துவத்தை விட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் வழியில் நாம் சித்த மருத்துவ தொழிலில் ஈடுபட வேண்டும். 108 பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழச்சி அடைகின்றேன் என்றதோடு, இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த சித்த மருத்துவர் சுந்தரமீனாள், அவரது கணவர் மனோகரன் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன் என்றார்.
நிறைவாக சின்னாளபட்டி அருளகம் சித்த வைத்திய சாலை சித்த வைத்தியர் சிவமுருகேசன் நன்றி கூறினார்.



