Homeபிற செய்திகள்ராயல் கேர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

ராயல் கேர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகள் நலத் துறை, பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (நியோநேட்டாலஜி) மற்றும் மருத்துவ ஊட்டச்சத்து துறை இணைந்து ஆக.1 முதல் 8-ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, செவிலியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், செவிலியர்கள் மற்றும் பெற்றோருக்காக தாய்ப்பால் கொடுக்கும் முறைகள், அதில் ஏற்படும் சவால்கள், தாய் மற்றும் குழந்தைக்கு கிடைக்கும் நீண்டகால நன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


விழாவின் சிறப்பு நிகழ்வாக குழந்தைகள் நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்ற தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான தாய்ப்பால் வழங்கும் நடைமுறைகள், தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியை மருத்துவமனை தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் மற்றும் கலா மாதேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சி மூலம் தாய்ப்பால் வழங்குவது தாயின் பொறுப்பு மட்டுமல்ல; குடும்பம், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்ற விழிப்புணர்வு வலியுறுத்தப்பட்டது.
தாய் சேய் நலனுக்கான அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய கருணைமிக்க சிகிச்சை சேவைகளை வழங்குவதில் ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது-.

படிக்க வேண்டும்

spot_img