fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 412 பேர்...

ஈரோட்டில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 412 பேர் பங்கேற்று அசத்தல்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஈரோட் டில், அண்மையில் (1 ஆகஸ்ட் 2026) நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் சார்ந்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில், 412 மாணவர்கள் பங்கேற்று சாதனை புரிந்துள்ளனர். இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்றது, இளம் தலைமுறையினரிடையே தமிழின் மீதான பற்றுதல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேச்சுப் போட்டியில் 141 மாணவர்களும், ஓவியப் போட்டியில் 187 மாணவர்களும், கட்டு ரைப் போட்டியில் 84 மாணவர்களும் என மொத்தம் 412 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளரும், ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனையின் செயலாளரு மாகிய சா.சிவானந்தன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை தி.கவிதா, செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாட்ராயன், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் வை.பாஸ்கர், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஈரோடு கிளை மேலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்ட னர். பரிசு பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு:
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
•இடைநிலைப் பிரிவு: ச.சு.தன்யா, ஆர். என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி, பாண்டமங்கலம், ஈரோடு.

  • மேல்நிலைப் பிரிவு: ந.நந்தினி, அரசு மேல்நிலைப் பள்ளி, விட்டம்பாளையம்.
  • கல்லூரிப் பிரிவு: ப.நந்தினி, ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.
    ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
  • இடைநிலைப் பிரிவு: சீ.கி.லித்திகா, ஆர். என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி, பாண்டமங்கலம், ஈரோடு.
  • மேல்நிலைப் பிரிவு: அ.செ.சித்தார்த், பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
  • கல்லூரிப் பிரிவு: பரிசு இல்லை.
    கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:
  • இடைநிலைப் பிரிவு: ர.ர.பூர்விதா, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சத்தியமங்கலம்.
  • மேல்நிலைப் பிரிவு: ச. யாழினி, வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி.
  • கல்லூரிப் பிரிவு: பி. சுபிக் ஷா, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

படிக்க வேண்டும்

spot_img