சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையில், கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி புதிய பிரிவை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லீரல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் குழும தலைமை செயல் அதிகாரி அனில் வினாயக், மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். நிரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறவி மரபணு கல்லீரல் கோளாறுகள் முதல் வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து மாநிலத்தில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.



