கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 2001-ம் ஆண்டு முன்னாள் மாணவர்களின் 25-வது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
“மீண்டும் இணையுங்கள்… நினைவுகளை மீட்டெடுங்கள்… மகிழுங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று கூடி பள்ளி நாட்களின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட னர். தொடர்ந்து, பள்ளியின் வேதியியல் ஆய்வகப் புதுப்பிப்பு பணிக்கான ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சார்பில், ஏ.பி.டி. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிஹர சுதன் ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ.6 லட்சம் நிதியுதவியை பள்ளித் தலை மையாசிரியரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி சார்பில் நான்சி வரவேற்புரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சார் பில் ஜோ மாஸ்டர், சதானந்தம் மாஸ்டர் மற்றும் பள்ளியின் தலை மையாசிரியர் அருட்தந்தை முனைவர் ஆரோக்கிய தேதேயுஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



