fbpx
Homeபிற செய்திகள்ஸ்டெம் செல் நன்கொடையாளரை 2 ஆண்டுக்கு பின் சந்தித்த பயனாளி நெகிழ்ச்சி

ஸ்டெம் செல் நன்கொடையாளரை 2 ஆண்டுக்கு பின் சந்தித்த பயனாளி நெகிழ்ச்சி

கடந்த 2022ம் ஆண்டில் அப்ளாஸ்டிக் அனீமியா பாதிப்பு சென்னையில் வசிக்கும் சாம்னு ஜான் என்பவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து ஸ்டெம் செல் நன்கொடையாளர் டிகே எம்எஸ் ஃபவுண்டே ஷன் இந்தியா உதவியுடன் 18 மாத தேடலுக்குப் பிறகு புதுதில்லியைச் சேர்ந்த பரிதோஷ் சக்சேனா அடை யாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, சென்னை மருத்துவக் கல் லூரி எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் டாக் டர் அருணா ராஜேந்திரன் தலைமையிலான மருத்து வக் குழு வெற்றிகரமாக ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற் கொண்டது. தற்போதுஅவர் முழுமையாக குண மடைந் துள்ளார். இந்நிலையில் சாம்னு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நன் கொடையாளர் பரிதோஷ் சக்சேனாவை முதல் முறையாகசந்தித்தார்.
இது குறித்த நிகழ்வில் டாக்டர் அருணா ராஜேந்திரன், டிகேஎம்எஸ் ஃபவுண்டேஷன் நிர்வாகத் தலைவர் பேட்ரிக் பால் ஆகியோர் ஸ்டெம் செல் நன்கொடை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியம், என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img