fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் 86வது கிளை திறப்பு விழா

மேட்டுப்பாளையத்தில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் 86வது கிளை திறப்பு விழா

ஐஸ்வர்யா கருத்தரித் தல் மையத்தின் 86-வது கிளை, மேட்டுப்பாளையம் கோவை மெயின் ரோட்டில் திறக்கப்பட்டது.
தொடக்க விழாவில், ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் நிறுவனர் டாக்டர் எஸ். சந்திர லேகா, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் என். சுனில் ஆனந்த் மற்றும் இந்திய மருத் துவ சங்கத்தின் பொருளாளர் டாக்டர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக் கேற்றி புதிய மையத்தை திறந்து வைத்தனர்.
ஐஸ்வர்யா கருத்தரித் தல் மையம், இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்க உதவியுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய கிளை தொடக் கத்தை முன்னிட்டு ரூ.5,000 மதிப்புள்ள விந்தணு பரிசோதனை ரூ.1,500க்கு வழங்கப்படுவதுடன், ஸ்பாட் புக்கிங் செய்த தம்பதியருக்கு இலவச ஆலோசனை மற்றும் இலவச ஸ்கேன் பரி சோதனையும் வழங்கப்பட் டது.
மேலும் IUI, IVF, ICSI சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பிரத்யேக சிகிச்சை தொகுப்புகளும் அறிவிக் கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img