தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந் தையால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேராலயங்களில் ஒன்றா கவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்க வுள்ளது.
இப்பெருவிழாவானது ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 05 புதன்கிழமை வரை தொடர்ந்து நடை பெற வுள்ளது. ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண் டகை கொடியேற்றி இவ் விழாவினைத் தொடக்கி வைக்கவுள்ளார்.
இத்தொடக்க விழாவில் ஆயர் கள், குருக்கள், இறைமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.ஆகஸ்ட் 2 (ஞாயிறு) குழந்தைகளுக்கான புது நன்மைத் திருப்பலி நடை பெறும். அன்று மாலையில் நகரின் முக்கிய வீதிகளில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவனி நடைபெறும். ஆகஸ்ட் 4 (செவ்வாய்) மாலை தூத் துக்குடி ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆரா தனையும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை மறையுரையும் நடைபெறும்.
ஆகஸ்ட் 5 புதன்கிழமை (பெருவிழா கூட்டுத் திருப்பலி) ஆயர் ஸ்டீபன், உபகாரிகளுக்கான திருப்பலி யை மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை ஆகியோர் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றிச் சிறப்பிப்பர்.
அன்னையின் பெருவிழா ஏற்பாடுகளை ஆலய அதிபர் மற்றும் பங்குத் தந்தை ஜான் செல்வம், உதவிப் பங்குத்தந்தையாக ஜெரால்டு, நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், குழுவின் பொருளாளர் ஜோ சோரிஸ், துணைச் செய லாளர் பெனாட் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.



