fbpx
Homeபிற செய்திகள்சுய கணக்கெடுப்பை முடித்த குடும்பங்களுக்கு தனித்துவ குறியீட்டு எண்: கலெக்டர் தகவல்

சுய கணக்கெடுப்பை முடித்த குடும்பங்களுக்கு தனித்துவ குறியீட்டு எண்: கலெக்டர் தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பை இணையதளம் மூலம் நிறைவு செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான குறியீட்டு எண் வழங்கப்படும் என, கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். கடலூரில் நடைபெற்ற மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஜூலை 31 வரை பொதுமக்கள் se.census.gov.in இணையதளம் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யலாம் என்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மாவட்டம் முழுவதும் வீடு வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.

இதற்காக 4,748 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.கணக்கெடுப்பின் போது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடிநீர் ஆதாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் உள்ளிட்ட 83 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த குடும்பங்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் தனித்துவ குறியீட்டு எண்ணை, வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் கட்டாயம் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img