சென்னை குரோம் பேட்டை ரேலா மருத்துவ மனையில், 97 வயது முதிய வருக்கு பொது மயக்க மருந்து இன்றி, விழித்த நிலையிலேயே நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
வீட்டில் தவறி விழுந்ததால், இடது தோள் பட்டையின் ரொட் டேட்டர் கப் தசைநாண் கடுமையாக கிழிந்திருந்தது.
முதியவரின் வயது மற்றும் இதய பலவீனம் காரணமாக பொது மயக்க மருந்து அளிப்பது ஆபத்தானது என்பதால், தோள்பட்டை பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ‘இன்டர்ஸ்கேலீன் நரம்பு மயக்க’ முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முழுவதும் நோயாளி விழிப்புடன் இருந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் பிசியோதெரபி அளிக் கப்பட்ட நிலையில், இரண்டே நாட்களில் முதி யவர் தன் காலில் நடந்து வீடு திரும்பினார்.
ரேலா மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் அசோக் எஸ். கவாஸ்கவர், எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை ஆகியோர் தலைமையிலான மருத் துவக் குழு இந்த சிகிச் சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
ரேலா மருத்துவமனை தலைவர் முகமது ரேலா, “90 வயதைக் கடந்த வர்களுக்கும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியும்“ என்றார்.



