fbpx
Homeபிற செய்திகள்அரிமா மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு; ரூ.35 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள்

அரிமா மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு; ரூ.35 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள்

லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷ னல் 3242 சி மாவட்டத்தின் புதிய அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை மாவட்டம் சூலூர் அருகே முதலிபாளையத்தில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் பி.எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த புதிய மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்றனர்.

முதல் நிலை கூடுதல் மாவட்ட ஆளுநராக சூரி நந்தகோபால் இரண்டாம் நிலை கூடுதல் மாவட்ட ஆளுநராக பாஸ்கர் பதவியேற்றனர். அரிமா பன்னாட்டு இயக்குநர் சீனிவாசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.விழாவில் வரவேற்பை அரிமா பிரகாஷ் வழங்கினார். மாவட்ட ஆளுநர் பி.எஸ். செல்வராஜ் மற்றும் ஜெயந்தி செல்வராஜ் தலைமை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், பன்னாட்டு இயக்குநர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 52 அரிமா சங்கங்கள் சார்பில் சுமார் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான 12 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img