fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிதம்பரத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சவுதி அரேபியாவில் உள்ள அல் பர்காஷ் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம் பரத்தில் நடைபெற்றது.இதற்கு அல் பர்காஷ் நிறுவனத்தின் பொது மேலாளரும், தொழிலதிபரு மான ஏ.எஸ்.சபாநாயகம் தலைமை தாங்கினார்.நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஏ.எஸ்.டி. சிவக்குமார் வரவேற்றார்.
எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, அருண்மொழிதேவன், சென்னை ராதா பொறி யியல் கல்லூரியின் நிறுவனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


இதில் ஏழை எளியோ ருக்கு, நலத்திட்ட உதவிகள், மன வளர்ச்சி குன்றிய ஆதரவற்ற,முதியோர் இல்லங்க ளுக்கு உதவுதல் மற்றும் ரத்ததான முகாம், பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் எந்திரம், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தேவை யான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், அண்ணாமலை பல்க லைக்கழக முன்னாள் கடல்வாழ் உயிரினங்கள் துறையின் இயக்குனர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கதிரவன், பொது மேலாளர் ஜெகதீஷ், தொழிலதிபர் முருகேசன், அரசு வக்கீல் வேல்முருகன்,ஏ.எஸ்.ஞான சேகரன், முன்னாள் நகர மன்ற தலைவர் மூசா,தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், டாக்டர் கிஷோர் குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி திட்ட இயக்குனர் விஜயகுமார், டாக்டர் கார்த் திகேயன், அருண்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தேவதாஸ்படை ஆண்டவர், நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மேலாளர் ஏ.எஸ்.டி.விஜயகுமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img