விருத்தாசலம் நல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பெரிய நெசலூர் ஊராட்சியில் குப்பைக் கொட்டும் இடத்தை பார்வையிட்ட அவர், குப்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நட்டு பொது மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத் தினார்.
பின்னர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தவும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தினார். மேலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை மேம்படுத்த தன்னார் வலர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஆலோசனை வழங்கினார்.
தே.புடையூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளையும், மே.மாத்தூர் ஊராட்சியில் ரூ.12.61 கோடி மதிப்பீட்டில் மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் உயர்மட்ட பாலப் பணிகளையும் பார் வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மனு அளித்த பயனாளி ஒருவருக்கு புதிய ரேஷன் அட்டையை வழங்கினார்.
ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் விஷ்ணுபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.



