fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி

கோவை துடியலூர் அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத் திற்கான மாரத்தான்” என்ற தலைப்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாரத்தானை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 3 கி.மீ., 5 கி.மீ. என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தினர்.நிகழ்ச்சியில் தலைமைச் செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் உடற்கல்வித் துறை மேற்கொண்டது.

படிக்க வேண்டும்

spot_img