கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல் வியில் சேர்ப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு குழு அலுவலர்களின் ஆய் வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமை யில் நடைபெற்றது.
கூட்டத்தில், பெற்றோர் இல்லாத அல்லது பெற் றோரில் ஒருவரை இழந்த நிலையில் உயர் கல்வியில் சேர்ந்த 30 மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய தாவது:
வரும் ஜூலை 10-ம் தேதி மாவட்ட கலெக் டர் அலுவலக வளா கத்தில் உயர்கல்வி சிறப்பு குறைதீர் முகாம் நடை பெறுகிறது. இதில் கல்வி உதவித்தொகை, கல்விக் கடன், சான்றிதழ்கள் மற்றும் உயர்கல்வி ஆலோச னைகள் வழங்கப்படும். மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் கோவை மாவட்டம் 85 சதவீதத்துடன் 2-வது இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்க சாதனை. இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாநகராட்சி துணை ஆணையர் குமரேசன், மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



