திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தலைமை யில், பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகள், அதிக அளவில் தோல்வியடைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகள், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்கல்வி சேர்க்கை நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது கலெக்டர் பேசியதாவது: மாண வர்களின் கல்வி முன் னேற்றத்தில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கல்வியில் பின்தங்கிய மற்றும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் அவர்களை ஊக்குவித்து முன்னேற்ற வேண்டும். பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிக ரிக்கும் வகையில் திட்ட மிட்டு செயல்பட வேண் டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் பள் ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலை மையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.



